அரசு கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்த நெல் மூட்டைகள் நனைந்ததால் விவசாயிகள் கவலை

அரசு கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்த நெல் மூட்டைகள் நனைந்ததால் விவசாயிகள் கவலை
X

பெரம்பலூர் அருகே தொண்டமாந்துறை கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்த நெல்மூட்டைகள் மழையால் நனைந்து சேதமடைந்தது.

பெரம்பலூர் அருகே அரசு கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்த நெல் மூட்டைகள் மழையில் நனைத்து சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறையில் ஐநூறுக்கும் அதிகமான விவசாயிகள் ஆண்டு தோறும் வயல்களில் நெல்பயிரிட்டு வருகின்றனர். இந்தாண்டு பயிரிட்டு அறுவடை செய்து நெல் மூட்டைகளை அங்குள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் வழங்கி வந்துள்ளனர்.


ஒரு மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் வழங்கிய நெல்லை கொள்முதல் செய்யாமல் அங்கு கொண்டுவரப்படும் வியாபாரிகளின் நெல்லை மட்டும் உடனடியாக கொள்முதல் செய்வதாகவும் இதனால் நெடு நாட்களாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகள் இரு தினங்களாக பெய்த மழையில் சேதமடைந்து நெல் முளைத்து வருவதாக குற்றம் சாட்டினர்.

அதிகாரிகளின் இந்த அலட்சியத்தால் மழையில் நனைந்த நெல் மூட்டைகளை நெல் உரிமையாளர்கள் கூலிக்கு ஆட்களை வைத்து நெல்களை உலரவைத்தும் சிலர் உலர்த்த போதுமான இடவசதி இல்லை என சொந்த இடங்களுக்கு கொண்டு செல்வதாகவும் வேதனை தெரிவித்தனர்..


மேலும் தொடர்ந்து தொண்டமாந்துறை பகுதி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் இது போன்ற சம்பங்கள் நிகழாமல் அரசு விவசாயிகளில் நெல்லை சேதத்தில் இருந்து பாதுகாக்கவும் முறையாக கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுதனர்.

Tags

Next Story