பெரம்பலூரில் காந்தி சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

பெரம்பலூரில் காந்தி சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை
X

பெரம்பலூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பெரம்பலூரில் உள்ள காந்தி சிலைக்கு அமைச்சர் சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.அதன் ஒருபகுதியாக பெரம்பலூர் பழையபேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள காந்திசிலைக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவரைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடப்பிரியா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதனைத்தொடர்ந்து காதிகிராப்டில் அங்காடியில் தீபாவளி விற்பனையை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai and future cities