வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தரக்கோரி ஒன்றரை வயது மகளுடன் மனு

கணவரின் உடலை மீட்டுத்தரக்கோரி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4 வது முறையாக கண்ணீர் மல்க மனு கொடுத்த மனைவி.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பென்ன கோணம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மனைவி கவுசல்யா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகள் உள்ளார். ராஜ்குமார் சவூதி அரேபியாவில் இரண்டரை ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ராஜ்குமார் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக இறந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே வெளிநாட்டில் உயிரிழந்த தனது கணவர் உடலை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றும், இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் தனது ஒன்றரை வயது மகளுடன் கண்ணீர் மல்க மனு கொடுத்துள்ளார். மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து உடலை மீட்டு தர வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்