பெரம்பலூரில் கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் தொடக்கம்

பெரம்பலூரில் கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் தொடக்கம்
X

பெரம்பலூரில், கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை, ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தொடக்கி வைத்தார்.

பெரம்பலூரில், கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை, மாவட்ட ஆட்சியர், பெரம்பலூர் சட்டமன்றஉறுப்பினர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பெரம்பலூர் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா, தொடக்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி, கர்ப்பிணி தாய்மார்களுக்கான கொரானா தடுப்பூசி போடப்படுகிறது. அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் தாமாகவே முன் வந்து கொரானா தடுப்பூசி இலவசமாக போட்டுக் கொள்ள வேண்டும்.

இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் 420 பிரசவித்த தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 5,070 கர்ப்பிணிகள் மற்றும் 3,987 பிரசவித்த தாய்மார்கள் என மொத்தம் 9,057 நபர்கள் உள்ளனர். இதுவரை பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதில் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை.

தடுப்பூசி போட்டு கொண்ட பிறகு ஏதேனும் பின்விளைவுகள் ஏற்பட்டால் 91541 55079 / 89031 99870 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றார். இந்நிகழ்வில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) கீதாராணி மற்றும் அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!