பெரம்பலூர்: நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகளுக்கு சமரசத்தீர்வு

பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று தேசிய மக்கள் நீதிமன்ற வாயிலாக விசாரணை நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக பேசி முடிப்பதற்கான தேசிய மக்கள் நீதிமன்றம், பெரம்பலூர் ஒருங்கிணைந்தநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி பல்கிஸ் தலைமையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர்விழி, குடும்பநல நீதிபதி தனசேகரன், தலைமை நீதித்துறை நடுவர் மூர்த்தி, சார்பு நீதிபதி ஷகிலா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர்மற்றும் சார்பு நீதிபதி லதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மகாலட்சுமி, நீதித்துறை நடுவர்கள் சுப்புலட்சுமி, சங்கீதா, சேகர், முனிகுமார், ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.
இதில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து தீர்வு காணப்பட்டது. அதன்படி 76 வங்கி வழக்குகள், 25 மோட்டார் வாகன விபத்து வழக்குகள், 14 சிவில் வழக்குகள், 531 சிறு குற்ற வழக்குகள் என மொத்தம் 647 வழக்குகளில், 3 கோடியே 81 லட்சத்து 37 ஆயிரத்து 658 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற, மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சங்க தலைவர் திருநாவுக்கரசு , அருணன்,மணி மன்னன் கருணாநிதி ஜெகதீசன், உள்ளிட்ட காவல்துறையினர், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu