அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற நபர் கைது

அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற நபர் கைது
X

லாட்டரி சீட்டு

அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற நபர் கைது

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் காமராஜர் வளைவு அருகில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

காவல் ஆய்வாளர் மனோகரன் மற்றும் உதவி ஆய்வாளர் சிக்கந்தர் பாஷா காவலர்கள் பெரியசாமி, செந்தில்குமார் ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

லாட்டரி விற்றுக் கொண்டிருந்த வடிவேல் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து தங்கம்-7, நல்ல நேரம்-25, விஷ்ணு-10, ரோசா-10, குமரன்-10 ரூபாய். 8000 பணம் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விற்பனை செய்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story