சின்ன வெங்காயத்தின் விலையை உயர்த்த கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
பெரம்பலூரில் சின்ன வெங்காயத்தின் விலையை உயர்த்த கோரி விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூரில் பெரிய வெங்காயத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது போல், சின்ன வெங்காயத்திற்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்யக்கோரி சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வெங்காயத்தை கொட்டி, தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ஆர்.ராஜசிதம்பரம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.நீலகண்டன் , மாவட்ட பொருளாளர் ஏ.மணி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் அ.வேணுகோபால், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு ராபி, காரிப் பருவங்களில் மத்திய அரசு நுகர்வோர் நலத்துறை பெரிய வெங்காயத்திற்கு ரூ.21 நிர்ணயம் செய்து, கொள்முதல் செய்வது போல சின்ன வெங்காயத்திற்கும் ரூ.30 வழங்கி கொள்முதல் செய்ய வேண்டும், அதற்கு தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவித்து, பெரம்பலூர் மாவட்த்தில் 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து வரும் உழவர்களை காக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சின்ன வெங்காயத்தை தலைமேல் வைத்து மாலையாக அணிவித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu