குன்னம் அருகே வசிஷ்டபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

குன்னம் அருகே வசிஷ்டபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
X

வசிஷ்டபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழி பன்னீர் செல்வம் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. 

பெரம்பலூர், குன்னம் அருகே வசிஷ்டபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வசிஷ்டபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழி பன்னீர் செல்வம் தலைமையில் , சிறப்பு கிராம சபை கூட்டம், மேட்டுகாலிங்கராயநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில் ஆலயத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக வேப்பூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சட்டநாதன் கலந்து கொண்டார். மேலும் இவ் நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அமுதா மணிவண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் சுப்பிரமணியன், வார்டு உறுப்பினர்கள் சுரேஷ், கவிமணி அலமேலு, மங்கையர்கரசி கொளஞ்சி அம்மாள், அறிவழகன் அணிதா, மயவேல் ஊராட்சி செயலாளர் சீனிவாசன், மற்றும் ஊராட்சி பணியாளர்கள் அனைத்து மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சமுதாயக் கூடம் அமைத்தல், மகளிர் சுகாதார வளாகம் அமைத்தல், பள்ளக்காலிங்கராயநல்லூர் முதல் கீழப்பலூர் வரை புதிய சாலை அமைத்தல் .வடிகால் வாய்க்கால் சீர்செய்தல், பாலங்கள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு