முன்னறிவிப்பின்றி வரகூரில் கிராமசபை கூட்டம் - பொதுமக்கள் அதிருப்தி

முன்னறிவிப்பின்றி வரகூரில் கிராமசபை கூட்டம் -  பொதுமக்கள் அதிருப்தி
X

முன் அறிவிப்பின்றி கிராம சபை கூட்டத்திற்கு வரகூரில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

குன்னம் அருகே, முன்னறிவிப்பின்றி வரகூரில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வரகூர் ஊராட்சியில், நேற்று எந்தவித முன்னறிப்பும் இல்லாமல் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், 1400 க்கு மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட 800 குடும்பத்தினர் வாழும் இக்கிராமத்தில் எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்கப்படாததால் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொள்ளவில்லை.

இருப்பினும் ஊராட்சி தலைவர் துரைசாமி, மற்றும் துணை தலைவர், ஊராட்சி எழுத்தர், தூய்மை பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டு கூட்டத்தில், பல தீர்மானங்கள் நிறைவேற்றி, அவர்களாகவே கையெழுத்து போட்டுக்ப்கொண்டதாக கூறப்படுகிறது. எனவே இந்த கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யவேண்டும் என, வரகூர் கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!