மதிமுக தலைமைக்கழக செயலாளர் துரை வையாபுரிக்கு பெரம்பலூரில் வரவேற்பு

மதிமுக தலைமைக்கழக  செயலாளர் துரை வையாபுரிக்கு பெரம்பலூரில் வரவேற்பு
X

பெரம்பலூர் 4 ரோடு பகுதியில், துரை வையாபுரிக்கு வரவேற்பு அளித்த மதிமுகவினர்.

மதிமுக தலைமைக்கழக செயலாளர் துரை வையாபுரிக்கு, பெரம்பலூரில் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

மதிமுக தலைமைக் கழக செயலாளராக தேர்வு செய்யப்பட்ட வைகோ மகன் துரை வையாபுரி, நேற்று மாலை திருச்சியில் இருந்து சென்னைக்கு காரில் பயணம் புறப்பட்டார். துரை வையாபுரிக்கு, பெரம்பலூர் 4 ரோடு பகுதியில்,மதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெரம்பலூர், அரியலூர் மாவட்ட செயலாளரும், அரியலூர் சட்டப் பேரவை தொகுதி எம்.எல்.ஏவுமான சின்னப்பா தலைமையில், அக்கட்சி நிர்வாகிகள் துரைராஜ், ஜெயசீலன், ரோவர் வரதராஜன் உள்ளிட்டவர்கள், பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் அவருக்கு , மாலை அணிவித்தும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்பு கொடுத்தனர். இந்நிகழ்ச்சியில், மதிமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!