பெரம்பலூர் மாவட்ட தே.மு.தி.க. கட்சி உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட தே.மு.தி.க. கட்சி உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்
X

பெரம்பலூர் மாவட்ட தே.மு.தி.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

பெரம்பலூர் மாவட்ட தே.மு.தி.க. கட்சி கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பற்றி ஆலோசனை கூட்டம் நடந்தது.

பெரம்பலூர் அடுத்துள்ள துறைமங்கலம் பகுதியில் இருக்கும் தனியார் அரங்கில் பெரம்பலூர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

கட்சியின் மாவட்ட கழக செயலாளர் சிவாஐயப்பன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,பெரம்பலூர் மாவட்ட தே.மு.தி.க. கட்சியின் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள சிவா ஐயப்பனை கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளுக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து உள்ளாட்சி குறித்து ஆலோசனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள கரும்புக்கான தொகையை உடனடியாக வழங்க வேண்டும், அரியலூர் மாவட்டத்தை சேர்த்த லாவண்யாவின் உயிரிழப்பிற்கு உரிய விசாரணை நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,

தே.மு.தி.க. கட்சியின் நகர செயலாளர் ஜெயக்குமார் வரவேற்புரை ஆற்றிய நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன், பொறியாளர் அணி துணைச் செயலாளர் ஆனந்தராஜ், மாற்றுத்திறனாளி அணி துணைச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட துணைச் செயலாளர் சங்கர், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் தவசி அன்பழகன், வேப்பூர் ஒன்றிய செயலாளர் மலர்மன்னன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், புகழேந்தி, விஜயகுமார், ஜோதிலட்சுமி, சஞ்சீவிகுமார், செந்தில்குமார், விஷ்வா மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர், கழக நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!