பெரம்பலூர்: அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர கோரிக்கை

பெரம்பலூர்: அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர கோரிக்கை
X

பெரம்பலூர் அருகே பாளையம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம்.

பெரம்பலூர் அருகே பாளையம் கிராமத்தில் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பெரம்பலூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்திற்கு 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஆஸ்பெட்டாஸ் சீட் மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த அங்கன்வாடி மையத்தில் போதிய இட வசதி இல்லாததாலும், சமையலறையும் குழந்தைகள் அமரும் இடமும் ஒன்றாக இருப்பதால் புகை சூழ்ந்து குழந்தைகளுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதோடு உடல் நல பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.

மேலும் பழமை வாய்ந்த இந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பெற்றோர்கள் சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நெல்லை சம்பவத்தை தொடர்ந்து இங்குள்ள குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று அஞ்சும் பெற்றோர்கள் போர்க்கால அடிப்படையில் இந்த அங்கன்வாடி மையத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!