மாற்று கட்சி வேட்பாளருக்கு பொன்னாடை அணிவித்த அ.தி.மு.க. வேட்பாளர் லதா

மாற்று கட்சி வேட்பாளருக்கு பொன்னாடை அணிவித்த அ.தி.மு.க. வேட்பாளர் லதா
X

மாற்று கட்சி வேட்பாளருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார் அ.தி.மு.க. வேட்பாளர் லதா.

பெரம்பலூர் நகராட்சி அ.தி.மு.க. வேட்பாளர் லதா மாற்று கட்சி வேட்பாளருக்கு பொன்னாடை அணிவித்து ஆதரவு திரட்டினார்.

பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் நகராட்சி 3வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் லதா போட்டியிடுகிறார். இவர் தினமும் தனது வார்டுக்கு உட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று அதே வார்டில் அவரை எதிர்த்து நிற்கும் தி.மு.க. மற்றும் விஜய் மக்கள் இயக்கம் உட்பட மாற்று கட்சி வேட்பாளர்களுக்கும் லதா மரியாதை நிமித்தமாக பொன்னாடை அணிவித்து தனக்கு ஆதரவு கேட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!