/* */

தொழில்சங்கங்கள் சார்பில் வருகின்ற 28, 29 அகில இந்திய வேலைநிறுத்தம்

நாட்டைக் காப்போம் மக்களைக் காப்போம் என்ற முழக்கத்தோடு வருகின்ற 28, 29 அகில இந்திய வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது

HIGHLIGHTS

தொழில்சங்கங்கள் சார்பில் வருகின்ற 28, 29 அகில இந்திய வேலைநிறுத்தம்
X

நாட்டைக் காப்போம் மக்களைக் காப்போம் என்ற முழக்கத்தோடு வருகின்ற 28, 29 அகில இந்திய வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. வேலைநிறுத்தத்தை ஒட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய தொழிற்சங்கங்கள், மாநில துறைவாரி சங்கங்கள் அளவில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு பெரம்பலூர் சிஐடியூ அலுவலகத்தில் நடைபெற்றது .

வேலை நிறுத்த ஆயத்த மாநாடு CITU மாவட்ட தலைவர் எஸ். அகஸ்டின், LPF மாவட்ட கவுன்சில் தலைவர் கே. கே. குமார் / AITUC மாவட்ட செயலாளர் ஏ. ராஜேந்திரன். HMS தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் சின்னச்சாமி கூட்டு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் LPFசங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் சி. செல்வராஜ், மாவட்ட கவுன்சில் செயலாளர் ரங்கசாமி | போக்குவரத்து கிளை பொருளாளர் சங்கர்-கணேஷ் CITU தொழிற்சங்கத்தின் சார்பாக மாவட்ட நிர்வாகிகள் ரங்கநாதன், சிவானந்தம், ரங்கராஜ், பன்னீர்செல்வம், அங்கன்வாடி சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் மணிமேகலை AITUC தொழிற்சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் முத்துசாமி, HMS தொழிற்சங்கத்தின் மாவட்ட இணைச்செயலாளர் நீலமேகம் ஆகியோர்ள் கலந்து கொண்டனர்.

மோடி அரசின் சீரழிவு கொள்கைகளை விளக்கவும் பொது வேலை நிறுத்தத்திற்கு மக்களிடம் ஆதரவு கோரி வருகின்ற இருபத்தி ஒன்றாம் தேதி, 22 ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் ஒன்றிய தலைநகரங்களில் பரப்புரை மேற்கொள்வது. மாலை நேரங்களில் தெருமுனைக் கூட்டங்கள் ஆலை வாயிற் கூட்டங்கள் தொழிலாளர் குடியிருப்புகளில் கூட்டங்கள் நடத்துவது. மார்ச் 12 முதல் வேலை நிறுத்த ஆயத்த குறித்த செய்தியை முகநூலில் பரப்புரை செய்வது. மார்ச் 22 ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்களை பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கின்றன வகையில் நடத்துவது. மார்ச் 26 பொது வேலை நிறுத்தத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்களின் வணிகர் சங்கத் தலைவர்களையும் மக்கள் அமைப்புகளின் ஆதரவை கோரிப் பெறுவது. மார்ச் 28ஆம் தேதி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்துவது. 29 -ம் தேதி பெரம்பலூர் காந்தி சிலை முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Updated On: 12 March 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?