ஓய்வூதியம் உயர்த்தி அறிவித்த முதல்வருக்கு மாற்றுத்திறனாளிகள் நன்றி

ஓய்வூதியம் உயர்த்தி அறிவித்த முதல்வருக்கு மாற்றுத்திறனாளிகள் நன்றி
X

ஓய்வூதியத்தை உயர்த்தி அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் இன்று சந்தித்த மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவித்தனர்.

ஓய்வூதியம் உயர்த்தி அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாற்றுத்திறனாளிகள் இன்று சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

ஓய்வூதியத்தை உயர்த்தி அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் இன்று சந்தித்த மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவித்தனர்.

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி கடந்த 3.12.2022 அன்று நடைபெற்ற விழாவில், வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 4 இலட்சத்து 39 ஆயிரத்து 315 பேருக்கு தற்போது பெற்றுவரும் ஓய்வூதியம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக வரும் ஜனவரி 1-ம் நாள் முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வரை இன்று (6.12.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் பா. ஜான்சிராணி, டிசம்பர்-3 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டி.எம்.என். தீபக், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் பி. சிம்மச்சந்திரன், தேசிய பார்வையற்றோர் இணையத்தின் திட்ட இயக்குநர் பி. மனோகரன், தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் டி.ஏ.பி. வரதகுட்டி, இந்திய மாற்றுத் திறனாளிகள் நல சங்கத்தின் தலைவர் ம. சகாதேவன், நேத்ரோதயா நிறுவனர் அறங்காவலர் கோவிந்தகிருஷ்ணன், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் ரெ. தங்கம், காது கேளாத மற்றும் பேச இயலாத மாற்றுத் திறனுடையோர் பாதுகாப்பு பவுண்டேசன் தலைவர் மற்றும் நிறுவனர் சு. அப்துல் லத்தீப், சிவகங்கை மாவட்டம், தவழும் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் கே.ஜே.டி. புஷ்பராஜ், தமிழ்நாடு உயரம் குறைந்தோர் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் எம்.ஜி. ராகுல், தென்காசி மாவட்டம், அமர் சேவா சங்கத்தின் உறுப்பினர் என். அழகப்பன், தமிழ்நாடு பார்வையற்றோர் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பூங்காவனம், காதுகேளாதோருக்கான கூட்டமைப்பின் ரமேஷ் பாபு மற்றும் மோகன், அனைத்து குறைபாடுகள் உள்ள பெண்களின் உரிமைகளுக்கான சங்கத்தின் (Society for Rights of all Women with Disabilities) பி. அருணாதேவி மற்றும் சங்க பிரதிநிதிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வின்போது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் உடனிருந்தார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு