மக்கள் தெளிவான முடிவை எடுப்பார்கள்: அமைச்சர் உதயநிதி
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (பைல் படம்).
ஈரோடு இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து திமுக அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பல அமைச்சர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் அன்பில் மகேஷ் பொய்யமொழி உள்பட திமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஈரோடு கிழக்குத் தேர்தலில் அதிமுகவினர் கொலுசு கொடுத்து வாக்கு சேகரிப்பதாக குற்றச்சாட்டுக்கு எழுந்துள்ளளதாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி, மக்கள் தெளிவான முடிவை எடுப்பார்கள் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி, திமுகவினர் வாக்காளர்களை அடைத்து வைப்பதாக கூறுவது பொய்யான குற்றாச்சாட்டு என்று கூறினார். கமலுக்கு கூடிய கூட்டம் வாக்குகளாக மாறாது என்ற கேள்விக்கு, பொறுத்து இருந்து பாருங்கள் என்றார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அண்ணாமலையிடம் கேளுங்கள் என ஆளுநர் தமிழிசை கூறியதற்கு, அண்ணாமலைக்கும் சட்டம் ஒழுங்குக்கும் என்ன சம்பந்தம் என அமைச்சர் உதயநிதி கேள்வி எழுப்பினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu