ஜி.டி.,நாயுடு கண்டுபிடித்த Orange Juice Extractor...!

ஜி.டி.,நாயுடு கண்டுபிடித்த  Orange Juice Extractor...!
X

ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகள் 

ஜி.டி.நாயுடு கண்டுபிடித்த Orange Juice Extractor.... கோவையில் உள்ள GEEDEEE Science Museumமில் உள்ளது.

கோயம்புத்தூர் மாமேதை ஜி.டி.நாயுடு நினைவாக அவினாசி சாலையில் இருக்கும் GEEDEEE Science Museumமில் ஜி.டி.நாயுடுவின் பல கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. அதில் ஒரு ஓரத்தில் ஆரஞ்சுப் பழத்தில் இருந்து ஆரஞ்சு பழச்சாறை பிழிந்து எடுக்கும் ஒரு கருவி இருந்தது. அந்த கருவிக்கு கீழே Automatic Orange Juice Extractor என்று மட்டும் எழுதியிருந்தது.

"இது ஒரு சாதாரண ஆரஞ்சு பழ ஜுஸர் தானே..இதை ஏன் ஒரு பெருமைமிகு கண்டுபிடிப்பாக காட்சிப்படுத்த வேண்டும்? அதுவும் இந்தியாவின் முதல் மின் மோட்டார், இந்தியாவின் முதல் SMD Components, முதல் ஓட்டு இயந்திரம் போன்ற அட்டகாசமான கண்டுபிடிப்புகளுக்கு இணையாக?" என்ற கேள்விக்கான பதிலை பார்க்கலாம். அந்த ஆரஞ்சு பழ ஜுஸர் ஒரு பெருமைமிகு கண்டுபிடிப்பு.

1930களில் தொழில் முறை பயணமாக ஜி.டி.நாயுடு அமெரிக்கா சென்றார். அப்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஆரஞ்சுப் பழங்களில் இருக்கும் வைட்டமின்கள், ஊட்டச்சத்துகள் பற்றிய ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கும் ஒரு பேராசிரியரை சந்தித்தார்.

"இருக்கும் பழங்களிலேயே ஆரஞ்சுப் பழத்தில் தான் வைட்டமின் சி மிக அதிக அளவில் இருக்கிறது. அந்த வைட்டமின் சி கூட ஆரஞ்சுப் பழ சுளைகளை விட, அதன் உட்புற தோலில் தான் மிக அதிகமாக இருக்கிறது. அதோடு உடலுக்குத் தேவையான காப்பர், மெக்னீசியம், கால்சியம், வைட்டமின் ஏ என எக்கச்சக்க சத்துகள் தோலின் உட்புற சுளையில் இருக்கின்றன. ஆரஞ்சுப் பழ சுளைகளை விட அதன் உட்புற தோல் தான் சத்தானது..." என்று விளக்கம் கூறி, ஆரஞ்சுப் பழத்தில் இருந்து அதன் பழரசத்தைப் பிழிந்து எடுக்க தான் கண்டுபிடித்த ஒரு கருவியையும் காட்டினார்.

"ஆரஞ்சுப் பழத்தில் இருந்தும்,அதன் உட்புற தோலில் இருந்தும் ஆரஞ்சு பழச்சாறை இந்த கருவியை வைத்து பிழிந்து எடுக்கையில்,இது தரும் அழுத்தத்தில் ஆரஞ்சுப் பழ விதைகளும் நொறுங்கி,கூழாகி,பழச்சாறுடன் சேர்ந்து விடுகிறது. இதனால் பழச்சாறு கசப்பாக இருக்கிறது. பழச்சாறும் பிழிய வேண்டும். அதே வேளை விதைகளும் நொறுங்கக் கூடாது. என்ன செய்வதென்று தெரியவில்லை.. உங்களால் உதவ முடியும?..." என்று தன் கருவியில் இருந்த பெரும் சவாலையும், மாமேதை ஜி.டி.நாயுடுவிடம் அந்த பேராசிரியர் விளக்கினார்.

அந்தப் பேராசிரியர் பேசிக் கொண்டிருக்கும் போதே கருவியை ஆராய்ந்த ஜி.டி.நாயுடு, "இது ஒரு விசயமா?இந்த பிரச்சினையை ஒரு Coil Spring வைத்து சரி செய்து தருகிறேன்..." என்று ஒரு நிமிடத்தில் ஒரு தீர்வைத் தந்தார். பேராசிரியரால் நம்பவே முடியவில்லை. "உங்களால் முடியுமா?" என்று வியப்பு விலகாமல் கேட்டார்.

அடுத்த நொடியே ஜி.டி.நாயுடு செயலில் இறங்கினார். ஆரஞ்சுப் பழத்தில் இருந்து ஆரஞ்சு பழச்சாறை பிழிந்து எடுக்க அந்த கருவியில் தர தேவைப்படும் Pressure அளந்து கொண்டே வந்தார். அதோடு எந்த அளவு அழுத்தத்தில் ஆரஞ்சுப் பழ விதைகள் நொறுங்குகிறது என்பதையும் கண்டறிந்தார். மிக துல்லியமாக 230 lbs அழுத்தத்தில் அந்த விதைகள் நொறுங்கின்றன என்பதை கண்டறிந்தார். எனில் 230 க்கு மேல் அழுத்தம் தர முடியாத ஒரு Coil Spring வடிவமைத்து அதை அந்த கருவியின் மேலே பொருத்தி விட்டார்.

இப்போது அந்த கருவியில் 230 க்கு மேல் அழுத்தம் தர முடியாததால் விதைகள் நொறுங்கவில்லை. ஆரஞ்சுப் பழத்தில் இருந்தும், அதன் உட்புற தோலில் இருந்தும் ஆரஞ்சு பழச்சாறு அட்டகாசமாக வெளியே வந்தது. விதைகள் நொறுங்காமல் அப்படியே தனித்து வெளியே வந்தது. அந்த பேராசிரியரால் நம்பவே முடியவில்லை. அந்த ஆண்டிலேயே மாமேதை ஜி.டி.நாயுடு கண்டுபிடித்துத் தந்த அந்த Orange Juice Extractor அமெரிக்காவில் தாறுமாறாக விற்பனையானது.

சுமார் 92 வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் ஜி.டி.நாயுடு அநாயாசமாக செய்து காட்டிய அந்த Orange Juice Extractor ல் ஒன்றைத் தான் கோயம்புத்தூர் ஜி.டி.நாயுடு மியூசியமில் ஒரு ஓரத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு மாபெரும் ஆராய்ச்சி வரலாற்றை தனக்குள் வைத்துக் கொண்டு அமைதியாக ஒரு ஓரத்தில் இருக்கிறது அந்த Orange Juice Extractor...

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!