இன்றும் நாளையும் 'ஆரஞ்சு அலர்ட்'; 10, 11ம் தேதி 'ரெட் அலர்ட்'- புயல் உருவாக வாய்ப்பு

இன்றும் நாளையும் ஆரஞ்சு அலர்ட்; 10, 11ம் தேதி ரெட் அலர்ட்- புயல் உருவாக வாய்ப்பு
X

வானிலை ஆய்வு மையம் செயற்கைக்கோள் படம்.

நாளை தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கான மழை விபரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வானிலை தகவல் தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளை தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது அதனை அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்ககூடும்.

இதன்காரணமாக 08.11.2021: (ஆரஞ்சு அலர்ட்) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திருவண்ணாமலை, சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, கோயம்புத்தூர், கரூர், நாமக்கல், திருச்சி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலான இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

09.11.2021: (ஆரஞ்சு அலர்ட்) திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, கடலூர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

10.11.2021: (ரெட் அலர்ட்) டெல்டா மாவட்டங்கள், கடலூர், பெரம்பலூர், அரியலூர் கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும், (ஆரஞ்சு அலர்ட்) திருவள்ளூர், சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை, மாவட்டங்களில் ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

11.11.2021: (ரெட் அலர்ட்) கடலூர், விழுப்புரம், சென்னை , புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும், (ஆரஞ்சு அலர்ட்) ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

12.11.2021: வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் அவ்வபோது கன மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் இளைஞரணி துணைச் செயலாளர்  செந்தில் முருகன்!