இன்று முதல் மூன்று காட்சிகள் மட்டும் அனுமதி - தியேட்டர் உரிமையாளர்கள் புலம்பல்

இன்று முதல் மூன்று காட்சிகள் மட்டும் அனுமதி - தியேட்டர் உரிமையாளர்கள் புலம்பல்
X

கொரோனா பரவலின் இரண்டாவது அலையின் தாக்கம் மிகவும் தீவிரமாக இருக்கும் நிலையில் இன்று(ஏப்ரல் 20) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் படுவதால் தியேட்டர்களில் இரவுக் காட்சிகளை நடத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது. ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் இருந்த நிலையில் இன்று முதல் மூன்று காட்சிகள் மட்டும் தான். அதிலும் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி. இதனால் படங்களின் வசூல் மிகவும் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது.

மேலும் ஞாயிறு காட்சிகள் இல்லை என்பதால் தங்கள் தொழில் மிகவும் பாதிக்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் கருதுகிறார்கள். தற்போது தியேட்டர்களை தொடர்ந்து நடத்துவதா அல்லது மூடுவதாக என்பது குறித்து அவர்கள் ஜும் மீட்டிங் மூலம் ஆலோசித்து வருகிறார்கள்.

Tags

Next Story
future of ai in retail