தஞ்சை மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிக ளின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டும்
மாவட்ட ஆட்சியராக அருங்காட்சியகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ,மாவட்டஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
தஞ்சாவூர் மாநகராட்சி மாவட்ட ஆட்சியராக அருங்காட்சியகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ,மாவட்டஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அருங்காட்சியகம், தஞ்சாவூர் அரண்மனை,சரஸ்வதிமஹால் நூலகம் உள்ளிட்ட இடங்கள் ஆய்வுசெய்யப்பட்டது
தஞ்சாவூர் மாவட்டம் சுற்றுலா பயணிகள் அதிகஅளவில் வருகைபுரியும் மாவட்டமாகும் கடந்த 2018ஆம் ஆண்டுகளில் 1.80 கோ டிசுற்றுலாப் பயணிகள் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகை தந்தனர். அதேபோல் 2019 ஆம் ஆண்டிலும் வருகை தந்தனர். அதன் பின்னர் கொரோனா பரவல் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது. கடந்த ஆண்டு 65 லட்சம் பேர் வந்து சென்றனர்.
இந்த ஆண்டு கடந்த 4 மாதங்களில் 62 லட்சம் பேர் வந்துள்ளனர். எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டும், சுற்றுலா பயணிகளின் வருகை மூலம் கிடைக்கும் தொகை சாதாரண கடைகள், ஏழைகள், வழிகாட்டிகள், கார் ஓட்டுநர்கள் உள்ளிட்ட தொடர்புடைய தொழில் செய்து வரும் அனைவருக்கும் சென்று சேர்கிறது. இதனால் தனிமனிதவருவாய் உயர்கிறது.
தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறை வளர்ச்சிஅடைந்து வருகிறது. இந்திய அளவில் தமிழ்நாடு எப்போதும் முதலிடத்தில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் இயற்கையாகவே கோயில்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. அனைத்து கோயில்களிலும் உள்ள கலை நுணுக்கங்கள் போன்று வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழகத்திலுள்ள கோயில்களில் இருக்கும் சிற்பக்கலை போல வேறு எங்குமே பார்க்க முடியாது.
அதேபோல் மருத்துவச் சுற்றுலா தொடர்பாக ஏப்ரல் மாதத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் 22 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்றனர். உலகிலேயே தமிழ்நாட்டில்தான் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் கிடைக்கிறது. அடுத்தமுறை இன்னும் அதிகமான நாடுகளில் இருந்து வருவர் என எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவிலேயே முதல் முறையாக தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில்தான் வருங்கால சந்ததியினரும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழர்களின் கலை, பண்பாடு போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார் சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் .
இந்த ஆய்வின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் துரைசந்திரசேகரன் (திருவையாறு), தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண் .ராமநாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் ஆர். உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சாவூர் மாநகராட்சி துணைமேயர் மரு.அஞ்சுகம் பூபதி, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகப் பொது மேலாளர் பாரதிதேவி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் ,மாவட்ட சுற்றுலா அலுவலர் கே. நெல்சன், மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் எஸ். முத்துக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu