சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ள சுவர் ஓவியங்கள்

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுற்றுச் சுவர்களில் வண்ண மலர்கள் கொண்ட ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் கோடை சீசன் காலத்தில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் லட்சக்கணக்கானோர் வருகை புரிகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமானது அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.இதன் ஒரு பகுதியாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் அரியவகை மரங்களும் வண்ண மலர்களும் உள்ளன.

தற்போது கோடை சீசன் துவங்க உள்ள நிலையில் சிம்ஸ் பூங்காவை சுற்றியுள்ள தடுப்புச் சுவர்களில் அழகிய பூக்களின் வண்ணத் தொகுப்பு ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.தத்ரூபமாக வரையப்பட்டுள்ள இந்த ஓவியங்கள் சுற்றுலா பயணிகள் மட்டுமன்றி உள்ளூர் மக்கள் கண்களுக்கும் விருந்தாக அமைந்து வருகிறது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி