ஊட்டியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூட்டி சீல்

ஊட்டியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூட்டி சீல்
X

நீலகிரி மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்புடன் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட உதகை, குன்னூர் , மற்றும் கூடலூர் (தனி) 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. 102 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட உள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் பேட்டியின் போது கூறினார்.

முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையிலும் பொது பார்வையாளர் முன்னிலையிலும் சீல் வைக்கப்பட்டது.நீலகிரி மாவட்டத்திலுள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!