நீலகிரி மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள்; கலெக்டர் ஆலோசனை

நீலகிரி மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள்; கலெக்டர் ஆலோசனை
X

 Nilgiri News- நீலகிரியில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை, கலெக்டர் அருணா தலைமையில் நடந்தது.

Nilgiri News- நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் தலைமையில் நடத்தப்பட்டது.

Nilgiri News, Nilgiri News Today- ஆலோசனைக் கூட்டத்துக்கு, கலெக்டர் அருணா தலைமை வகித்தார். போலீஸ் எஸ்.பி பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி முன்னிலை வகித்தனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் அருணா பேசியதாவது,

நீலகிரி மாவட்டத்தில் தெர்மாகோல் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி சிலைகளை உருவாக்கக்கூடாது. விநாயகர் சிலைகளை கரைக்கும் போது மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் ஆன சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும். சிலைகளின் ஆபரணங்களை தயாரிப்பதற்கு உலர்ந்த மலர்கூறுகள், வைக்கோல் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தி சிலைகளை பளபளப்பாக மாற்றலாம். சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை சாயங்களை பயன்படுத்தி வர்ணம் பூசலாம். எனாமல் போன்ற செயற்கை வண்ணங்களை பயன்படுத்தக்கூடாது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி-குந்தா தாலுகாவில் காமராஜர்சாகர் அணை, மசினக்குடி மரவகண்டி அணை, செம்மநத்தம் ஆறு, நடுவட்டம் டி.ஆர்.பஜார் அணை, குன்னூர் தாலூகாவில் லாஸ் நீர்வீழ்ச்சி, கோத்தகிரி தாலுகாவில் உயிலட்டி நீர்வீழ்ச்சி, கூடலூர் தாலுகாவில் இரும்பு பாலம், பந்தலூர் தாலுகாவில் பொன்னானி பகுதிகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். இந்த எட்டு நீர்நிலைகளில் மட்டுமே, சிலைகளை விசர்ஜனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு, கலெக்டர் அருணா தெரிவித்தார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் தனபிரியா (பொது), மணிகண்டன் (வளர்ச்சி), போலீஸ் ஏஎஸ்பி சவுந்தர்ராஜன், கோட்டாட்சியர்கள் மகாராஜ் (ஊட்டி), பூஷணகுமார் (குன்னூர்), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், ஊட்டி நகராட்சி கமிஷனர் ஏகராஜ், வட்டார போக்குவரத்து அதிகாரி தியாகராஜன் உள்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !