பார்வை குறைபாடு என்பது குணப்படுத்தக் கூடியது தான்: வெங்கய்யா நாயுடு தகவல்
கண் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை அதிகப்படுத்துவதன் தேவையை குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள், ஆளுமைகளை ஈடுபடுத்தி உள்ளுர் மொழிகளில் ஊடக பிரச்சாரத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார்.
உதகமண்டலத்தில் உள்ள ஆளுநர் மாளிகையிலிருந்து காணொலி காட்சி மூலம் ஆனந்த் பஜாஜ் கண்விழி ஆய்வு நிறுவனத்தை நேற்று தொடங்கி வைத்த நாயுடு, பார்வை குறைபாடு என்பது தவிர்க்கபடக் கூடியதும், குணப்படுத்தக் கூடியதும் தான் என்ற தகவலை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
ஊரக பகுதிகளில் அரசின் துணை மருத்துவ மையங்கள் திறக்கப்படும்போது அவற்றுக்கு தனியார் மருத்துவமனைகள் ஒத்துழைப்பாக இருக்க வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தினார். நவீன வாழ்க்கை முறைகளும் பணி தேவைகளும், சராசரி பார்வை நேரத்தை அதிகரிப்பதாக கூறிய நாயுடு மின்னணு சாதனங்களின் பயன்பாட்டை குறிப்பாக, குழந்தைகளிடையே முறைப்படுத்துவது அவசியம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu