ஜிகா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் - நீலகிரி கலெக்டர் சுறுசுறுப்பு

ஜிகா வைரஸ் பரவல்  தடுப்பு நடவடிக்கைகள் - நீலகிரி கலெக்டர் சுறுசுறுப்பு
X
கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால், நீலகிரி எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, RTPCR நெகடிவ் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே, மாவட்டத்திற்குள் வர அனுமதிக்கப்படுவர் என்று, மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.

உதகையில் இன்று செய்தியாளர்களிடையே பேசிய ஆட்சியர், நீலகிரி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் வெளி மாநிலத்திற்கு சென்று வந்தாலும், இந்த சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றார், கேரளா மாநிலத்தில் ஜிகா வைரஸ் பரவி வருவதை தொடர்ந்து, எல்லைப் பகுதியான கூடலூர், பந்தலூர் பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு, நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக , அவர் கூறினார்.

இப்பகுதிகளில், மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறி ஆட்சித் தலைவர், கொசுக்களால் இந்த வைரஸ் பரவுவதால், இப்பகுதிகளில் தொற்று தடுப்பு நடவடிக்கையாக பிளீச்சிங் பவுடர் தெளிப்பது, மாலை நேரங்களில் புகை மூட்டுவது போன்ற பணிகள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மேற்கொள்ளுமnறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!