சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
X

பைல் படம்.

உதகையில் சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

உதகை அன்பு அண்ணா காலனியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் 20, இவர் ஊட்டியில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமியுடன் பழகி வந்தார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதற்கிடையே, பன்னீர்செல்வம் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும், மேட்டுப்பாளையத்துக்கு அழைத்து சென்று சிறுமியை திருமணம் செய்துள்ளார். சிறுமியை காணவில்லை என, பெற்றோர் உதகை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்த பன்னீர்செல்வம் மற்றும் சிறுமியை மீட்டு உதகைக்கு அழைத்து வந்தனர்.

தொடர்ந்து, 18 வயது பூர்த்தி அடையாத சிறுமியை குழந்தை திருமணம் செய்ததாக பன்னீர்செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!