உதகை பள்ளியில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்
மகளிர் தின விழா.
உதகையில் பெண்களும் சுற்றுச்சூழலும் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. சர்வதேச மகளிர் தினம் உதகை பிங்கர் போஸ்ட் புனித தெரேசன்னை உயர்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பில் கொண்டாடப்பட்டது. சுற்றுச்சூழலும், பெண்களும் என்ற தலைப்பில் கருத்தரங்கு கோலப்போட்டி மரக்கன்றுகள், மூலிகை, தோட்டங்கள் பராமரிப்பு போன்ற சூழல் கல்வி நடைபெற்றன.
இந்நிகழ்வின் வரவேற்புரை நிகழ்த்திய தலைமையாசிரியர் ஃபாதர் பெலவேந்திரம் சூழல் பாதுகாப்பிற்கு ஒரு நாட்டின் அனைத்து விதமான வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு முதுகெலும்பு போன்றது. இயற்கையின் பாதுகாப்பிலும் பெண்கள் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளனர் என்றார். கிங்ஸ்டன் ஆண்டனி உதவி தலைமையாசிரியர் பேசுகையில் மாணவிகளுக்கு கோலப் போட்டி நடத்தி சமூக கட்டுப்பாட்டிற்கு பெண்கள் பங்கு அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பாரம்பரியம்,கலாச்சாரங்களை பாதுகாப்பதில் சமூகத்தில் அவர்களின் நிலைப்பாடுகள் தவிர்க்க இயலாதது என்று கூறினார். குன்னூர் கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் திரு வி சிவதாஸ் குறிப்பிடுகையில் இந்திய கலாச்சாரம் பெண்களை புனிதமாக கருதுகின்றது. ஓடும் நதிகள் அனைத்தும் பெண்களின் பெயராலேயே அழைக்கப்படுகிறது வன தேவதைகளாக பார்க்கின்றனர்.
சூழல் பாதுகாப்பில் பெண்களின் பங்கு இன்றியமையாதது. கிராமங்களில் விவசாயம், கைவினைப் பொருட்கள், போன்ற அனைத்து துறைகளின் மேம்பாட்டுக்கும் தரிசு நில மேம்பாடு மூலிகை மரக்கன்றுகள் வளர்ப்பது என எல்லா துறைகளில் மகளிர் பங்கு இன்றியமையாத ஒன்றாகும். புதிய தொழில்நுட்பங்கள் பொருளாதார வளர்ச்சியில் இயற்கையோடு இணைந்த பொருளாதார வளர்ச்சிக்கும் பெண்களின் பங்கு இந்தியாவிலும் உலகளவிய நிலையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
பள்ளிக் காலங்களில் மாணவிகள் சூழல் மேம்பாட்டிற்கான பணிகளை எடுத்துச் செல்வது மிக அவசியம் என குறிப்பிட்டார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை தேசிய பசுமைப்படை பொறுப்பு ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu