உலக சுற்றுலா தினம்: உதகை படகு இல்லத்தில் படகு போட்டி

உதகை படகு இல்லத்தில் நடைபெற்ற படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.

நீலகிரி மாவட்டம் முக்கிய சுற்றுலா ஸ்தலமாக விளங்குவதால் ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை புரிகின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகமானது பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனோ காரணமாக நீலகிரி மாவட்டத்தில் எந்த ஒரு கோடை விழாக்களும் நடைபெறவில்லை.

இந்நிலையில் தற்போது இரண்டாம் கட்டம் சீசன் துவங்கியுள்ள நிலையில் இன்று உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது இதனையொட்டி சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் உள்ள உதகை படகு இல்லத்தில் இன்று சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இதில் கலந்துகொண்டு படகு போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்று படகு போட்டியில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கினார். உலக சுற்றுலா தினத்தில் முதல் நிகழ்ச்சியாக உதகை படகு இல்லத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியால் படகு இல்லம் களைகட்டி காணப்பட்டது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு