உதகையில் உலக செவிலியர் தின கொண்டாட்டம்

உதகையில் உலக செவிலியர் தின கொண்டாட்டம்
X
உதகையில் நடந்த செவிலியர் தின விழாவில் நீலகிரி கலெக்டர் கேக் வெட்டிய காட்சி.
உதகை மண்டலத்தில் செவிலியர் தினம் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சர்வதேச செவிலியர்கள் தினத்தை முன்ன்ட்டு உதகை அரசு மருத்துவமனை செவிலியர்கள் பயிற்சி பள்ளியில் பயிலும் செவிலியர்களுடன் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது செவிலியர்கள் மத்தியில் உரையாற்றிய ஆட்சியர், நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கான மருத்துவ மனையின் உள்கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.மேலும் கொரோனா பாதுகாப்பு மையங்கள் பொறுத்தவரை இன்றும் 3 மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இமாவட்டம் முழுவதும் 300 தன்னார்வர்களை பயன் படுத்தி, தனிமை படுத்தப்பட்ட பகுதிகளை சுற்றியு ள்ள பொது மக்களிடம் நேரடியாக சென்று, கொரோனாக்குரிய 9 அறிகுறிகளில் ஏதேனும் தெரிந்தால், அவர்களுக்கு ஆரம்ப கட்ட நிலையில் சிகிச்சையளிக்க எளிதாக இருக்ககூடும் எனத் தெரிவித்தார்.

மேலும் மாவட்டத்தில் இதுவரை 1.50 லட்சத்திற்கும் மேற்ப்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்றும் பழங்குடியின மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள தயக்கம் காட்டி வருவதால் அவர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Tags

Next Story