உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு குறித்த நிகழ்ச்சி

உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு குறித்த நிகழ்ச்சி
X

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தினத்தை முன்னிட்டு உதகை அரசு உதவி பெறும் பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு உதகை நகராட்சி சுகாதார அலுவலர் (பொறுப்பு) ஸ்ரீதர் தலைமை தாங்கி அயோடின் கலந்த உப்பை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அயோடின் பற்றாக்குறையால் தைராய்டு, மூளை வளர்ச்சி குறைவு, குறை பிரசவம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதை தடுக்க அயோடின் குறைபாட்டை நீக்க வேண்டும் என்றார். தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு ஓவியம், கட்டுரை, ரங்கோலி போட்டிகள் நடைபெற்றது. இதில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future