இன்று உலக சாக்லெட் தினம் - களையிழந்த சுற்றுலா நகரம்

இன்று உலக சாக்லெட் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், உதகையில் வழக்கமான உற்சாகம் இழந்து நகரம் களையிழந்து காணப்பட்டது.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே இனிப்புகள் என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. அதிலும் குழந்தைகளைப் பொறுத்தவரையில் இனிப்புகள் தான் அவர்களது மகிழ்ச்சியாக காணப்படும். ஒவ்வொரு வருடமும் ஜூலை 7ஆம் தேதி சாக்லேட் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சாக்லேட் பற்றிய சுவையான அனுபவங்களை உணர்த்துவதற்காகவே இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஐரோப்பாவில் முதன்முதலாக 1550ம் ஆண்டுதான் முதன்முதலில் சாக்லேட் கண்டு பிடிக்கப்பட்டது. அதனால் தான் இந்த நாளை சாக்லேட் தினமாக கொண்டாடுகிறோம். இதன் ஒரு பகுதியாக சுற்றுலா நகரமான உதகையில், சாக்லேட் தயாரிக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளின் அனைவரையும் ஈர்க்கிறது.

உதகைக்கு சுற்றுலா வரும் பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்துவிட்டு, நீலகிரி தைலம், டீ தூள், வர்க்கி அத்துடன் சாக்லேட் வகைகளை வாங்கிச் செல்வது வாடிக்கையான ஒன்றாகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் ஈர்த்து வருகிறது இந்த ஹோம் மேட் சாக்லேட். ஆனால், கொரோனா தொற்றின் தாக்கம், ஊரடங்கு தளர்வு உள்ளிட்டவற்றால், இந்த ஆண்டும் சாக்லேட் தினம், களையிழந்து காணப்படுகிறது.

இதுகுறித்து, சாக்லெட் தயாரித்து விற்பனை செய்யும் உரிமையாளர் கூறுகையில், ஆண்டுதோறும் இந்த சாக்லேட் இந்த தினத்தில் புதுவகையான சாக்லெட்டுகளை உற்பத்தி செய்து சுற்றுலாப் பயணிகளிடம் விற்பனை செய்யப்படும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பொது ஊரடங்கு காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளதால் ஹோம் மேட் சாக்லேட் விற்பனை குறைந்துள்ளதாக, கவலையோடு தெரிவித்தார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil