உதகையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

உதகையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

நீலகிரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர்.

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி உதகை தமிழகம் விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது.

நீலகிரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில், உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊட்டி தமிழகம் விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் எஸ்.பி.அம்ரித் தலைமை தாங்கி பேசும்போது, எய்ட்ஸ் நோய் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்வர்களை சமுதாயத்தில் தனிமைப்படுத்தாமல், அவர்களை ஒன்றிணைத்து அன்புடன் அரவணைத்து செல்ல வேண்டும்.

இதனை நடைமுறையில் அனைவரும் பின்பற்றி பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார். அதனை தொடர்ந்து கலெக்டர் 17 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தற்காலிக இயலாமை தொகை மாதந்தோறும் தலா ரூ.1,௦௦௦ பெறுவதற்கான ஆணைகளையும், தொழிலாளர் நலத்துறை (சமூக பாதுகாப்பு திட்டம்) சார்பில் ௧௯ பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம், திருமணம் மற்றும் இயற்கை மரணம் என ரூ.1,31,000 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான ஆணைகளையும் வழங்கினார்.

முன்னதாக உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார். பின்னர் கலெக்டர் தலைமையில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் . இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் மனோகரி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் பழனிசாமி, மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil