உதகையில் ஊரடங்கை பயன்படுத்தி மது விற்பனை செய்த பெண் கைது

உதகையில் ஊரடங்கை பயன்படுத்தி மது விற்பனை செய்த பெண் கைது
X

மது விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட மோனிஷா.

உதகையில் ஊரடங்கை பயன்படுத்தி மது விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

முழு ஊரடங்கு காரணமாக மதுக் கடைகள் திறக்கப்படவில்லை. இதைப் பயன்படுத்தி உதகை சோலூர் பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்களை விற்பனை செய்த மோனிஷா (23) என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

உதகை அருகே சோலூர் பகுதியை சேர்ந்த பெண்மணி மதுபாட்டில்களை விற்பனை செய்வதாக புதுமந்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் புதுமந்து ஆய்வாளர் வீரம்மாள் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு, உதகை அருகே உள்ள சோலூர் பகுதியில் மதுபாட்டில்களை விற்பனை செய்த பெண்ணை கைது செய்தனர்.

அவரிடமிருந்து 29 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளச்சந்தையில் மது பாட்டில்களை விற்பனை செய்த இளம்பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் உதகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!