உதகை தாவரவியல் பூங்காவை உருவாக்கிய வில்லியம் கிரகம் மெக்ஐவர் நினைவு தினம் அனுசரிப்பு

உதகை தாவரவியல் பூங்காவை உருவாக்கிய வில்லியம் கிரகம் மெக்ஐவர் நினைவு தினம் அனுசரிப்பு
X

உதகை அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய வில்லியம் கிரகம் மிக் ஐவரின் 145 ஆவது நினைவுதினத்தை ஒட்டி,  ஸ்டீபன் பேராலயத்தில் உள்ள அவரது கல்லறையில், கலெக்டர் இன்ன சென்ட திவ்யா மற்றும் தோட்டக்கலை துறையினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

உதகை அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக்ஐவரின் நினைவு நாளான இன்று மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா உருவாக காரணமாக இருந்த வில்லியம் கிரகம் மெக் ஐவரின் 145வது நினைவு தினம், நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத் துறையின் சார்பாக, இன்று அனுசரிக்கப்பட்டது.

இங்கிலாந்து நாட்டில் இருந்து 1848ஆம் ஆண்டு உதகை வந்த இவரால் தான், ஆசியாவிலேயே மிகப்பெரிய மிக தாவரவியல் பூங்கா அமைப்பதற்கான வேலைகள் தொடங்கப்பட்டு, பல நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட அரிய வகை மரங்கள் மற்றும் தாவரங்கள் நடவு செய்யப்பட்டு, 1867 ஆம் ஆண்டு பணிகள் நிறைவு பெற்றன.

மேலும் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் அமைய முக்கிய காரணமாக இருந்த, இவரின் 145 வது நினைவு நாளான இன்று, ஸ்டீபன் பேராலயத்தில் உள்ள அவரது கல்லறையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, தோட்டக்கலை துறை இணை இயக்குனர் மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு, அவரது கல்லறைக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!