/* */

உதகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டம் வழங்கும் முகாம்

ரூபாய் 21,38,911 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

உதகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டம் வழங்கும் முகாம்
X

உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி தலைமை தாங்கி 19 பேருக்கு ரூபாய் 18,99,981 மதிப்பில் மின்களத்தால் இயங்கும் சக்கர நாற்காலிகளை வழங்கினார்.

மேலும், 5 பேருக்கு ரூபாய் 26,435 மதிப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரங்கள், 6 பேருக்கு 3 வகை மாற்றுத்திறனாளிகள் திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ் தங்க நாணயம், 15 பேருக்கு ரூபாய் 1,87,500 மதிப்பில் வாய் பேச இயலாத, செவித்திறன் குறைபாடு உடைய மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கைபேசிகள், 5 பேருக்கு ரூபாய்24,995 மதிப்பில் காதொலி கருவிகள் என மொத்தம் 50 பயனாளிகளுக்கு ரூபாய் 21,38,911 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளி இடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்யராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 2 March 2022 11:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...