உதகையில் சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்பு

உதகையில் சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்பு
X

உதகை அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் முன்பு திமுகவினர் பட்டாசு வெடித்து சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.

உதகை நகர திமுக சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு முக கவசம், இனிப்புகள் வழங்கி வரவேற்ற திமுக நகர செயலாளர்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால் தமிழக முதல்வரின் உத்தரவுப்படி அனைத்து சுற்றுலாத்தலங்களும் இன்று திறக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, சுற்றுலா துறையின் கீழ் இயங்கும் உதகை படகு இல்லம் மற்றும் பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டன.

கடந்த நான்கு மாதங்களுக்கு பிறகு நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்பட்டதால் திமுகவின் உதகை நகர செயலாளர் ஜார்ஜ் தலைமையில் உதகை அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் முன்பு பட்டாசு வெடித்து சுற்றுலா பயணிகளுக்கு முகக் கவசங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.

கடந்த நான்கு மாதங்களுக்கு பிறகு சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!