உதகை பைக்காரா அணையில் நீர் திறப்பு

தற்போது தினமும் சராசரியாக 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் மின்வாரியம் கட்டுப்பாட்டில் 13 அணைகள் உள்ளது. இங்கு 12 மின் நிலையங்கள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டது. இதனால் மின் தேவை குறைந்தது. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக தொழில் நிறுவனங்கள் அனைத்தும் இயங்கி வருகின்றன.

இதனால் மின் தேவை அதிகரித்து உள்ளது. இதை கருத்தில் கொண்டு நீலகிரியில் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக பைக்காரா அணையில் இருந்து 3 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. தற்போது தினமும் சராசரியாக 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!