உதகையில் பெய்து வரும் கன மழையால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் இடியுடன் கூடிய கனமழையால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு.

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை தற்போது வரை நீடித்து வருவதால் பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. குறிப்பாக உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் மழைநீர் வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை வெள்ளத்தில் இருசக்கர வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மழை நீர் வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

குறிப்பாக உதகை காந்தல் எனும் பகுதியில் சலவைத் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். தற்போது அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் மழைநீர் வெள்ளம் புகுந்துள்ளது. இந்த கனமழையால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

தொடர்ந்து நகரில் குன்னூர் சாலை, அரசு தாவரவியல் பூங்கா சாலை, மத்திய பேருந்து நிலையம் சாலைகளில், மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இடியுடன் கூடிய கனமழை தற்போது வரை நீடித்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai healthcare products