நீலகிரியில் குடிமகன்களின் கூடாரமான வாட்டர் ஏடிஎம்கள்

நீலகிரியில் குடிமகன்களின் கூடாரமான வாட்டர் ஏடிஎம்கள்
X

வாட்டர் ஏடிஎம்-கலீல் வைக்கப்பட்டடுள்ள காலி மது பாட்டில்கள். 

சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் மாவட்டம் முழுவதும் 68 வாட்டர் ஏடிஎம்கள் அனைத்து பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிகின்றனர். நீலகிரியில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் மாவட்டம் முழுவதும் 68 வாட்டர் ஏடிஎம்கள் அனைத்து பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ளன.

தற்போது இந்த வாட்டர் ஏடிஎம்கள் பராமரிப்பின்றி காணப்படுவதால் குடிமகன்கள் பயன்படுத்தும் இடமாக மாறியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமானது உடனடியாக தீர்வு காணும் வகையில் வாட்டர் ஏடிஎம்களை பயன்படுத்தும் வகையில் பராமரிப்பு செய்ய வேண்டுமெனவும் வாட்டர் ஏடிஎம்களை அசுத்தம் செய்யும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
ai marketing future