நீலகிரியில் 3 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியது
தேர்தல் நாளில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளித்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். தவறினால் தேர்தல் ஆணையம் கூறியுள்ள படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கொரோனா தொற்று உள்ளவர்கள் தனியாக வாக்களிக்க மாலை 6 மணி முதல் 7 மணி வரை அனுமதிக்கப்படுவர் என உதகை ஜோசப் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்த மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் இன்று அதிகாலை முதலே துவங்கிய நிலையில் உதகை சட்டமன்றத் தொகுதியில் அதிகாலை 7 மணி முதலே வாக்குப்பதிவுகள் துவங்கின. வாக்காளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு கிருமிநாசினிகள் பயன்படுத்திய பின்பு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உதகை ஜோசப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட 3 சட்டமன்ற தொகுதிகளிலும் 868 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவுகள் துவங்கியுள்ளன இதில் ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குப் பதிவுகள் சற்று தாமதமானது அதை சரிசெய்ய நுண்கதிர் பார்வையாளர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை சரி செய்து பின்பு வாக்குப்பதிவுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இன்னும் இரண்டு மணி நேரத்தில் மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு விகிதம் நமக்கு பெறப்படும் எனவும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளித்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் தவறும் பட்சத்தில் தேர்தல்ஆணையம் விதிமுறைகளின்படி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் கூறினார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu