உதகையில் களிமண் விநாயகர் சிலைகள் விற்பனை ஜோர்

உதகையில் களிமண்  விநாயகர் சிலைகள் விற்பனை ஜோர்
X

விநாயகர் சதுர்த்தியை, உதகையில்  விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, உதகையில் களிமண் விநாயகர் சிலைகளின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது, விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபடுவது வழக்கம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் களையிழந்து காணப்பட்டன. இந்த வருடமும் பொது இடங்களில் சிலை வைக்க, அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. பொதுமக்கள் அவரவர் வீட்டிலேயே விநாயகர் சிலைகளை வைத்து வழிபட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் உதகை நகராட்சி மார்க்கெட்டில் விநாயகர் சிலைகள் விற்பனை களைகட்டியுள்ளது. களி மண் விநாயகர் சிலைகளை, பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். அதேபோல், பூக்கள், பழம், சுண்டல், எருக்கம் பூ உள்ளிட்டவற்றின் விற்பனையும் ஜோராக நடைபெற்றது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!