உதகை அருகே நாம்தமிழர் கட்சியில் இணைந்த கிராம மக்கள்

உதகை அருகே நாம்தமிழர் கட்சியில் இணைந்த கிராம மக்கள்
X

உதகை அருகே ஆல்காடு நகர் பகுதியில் அடிப்படை வசதிகளை மீட்டெடுப்பதற்காக கிராமமக்கள் நாம்தமிழர் கட்சியில் இணைந்தனர்.

உதகை அருகே அடிப்படை வசதிகளை மீட்டெடுப்பதற்காக கிராம மக்கள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.

உதகை அருகே உள்ள உல்லத்தி பேரூராட்சிக்குட்பட்ட ஆல்காடு நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர். இப்பகுதியில் உள்ள சுமார் 60 குடும்பங்களை சேர்ந்தவர்கள் நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதுவரை இப்பகுதியில் எந்த ஒரு அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாத நிலையில் பல கட்சியினர் தங்கள் கிராமத்தை புறக்கணித்து வருவதாகவும் தங்களுக்கான அடிப்படைகளை மீட்டெடுக்க கட்சியில் இணைந்ததாக கிராம இளைஞர்கள் தெரிவித்தனர்.

இந்த கிராமத்தில் குடிநீர், நடைபாதை, தெருவிளக்கு, தடுப்புச்சுவர் உள்ளிட்ட முக்கிய அடிப்படை தேவைகளை நாம் தமிழர் கட்சியில் இணைந்து பொதுமக்களுக்கான சேவைகளை பெற்று தருவதாகவும் இளைஞர்கள் தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சியில் இணைந்த அனைவருக்கும் விவசாயிகளின் அடையாளமாக உள்ள பச்சை துண்டு அணிவித்து நாம் தமிழர் கட்சியின் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதில் நீலகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் தலைவர் ஜெயகுமார், நகர செயலாளர் செல்வம், ரவி, மற்றும் ஆல்காடு நகர் பொறுப்பாளர் விக்னேஸ்வரன், செயலாளர் ஆனந்தன், செய்தி தொடர்பாளர் மகேந்திர ராஜ், மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story