உதகையில் விஜய் மக்கள் மன்றம் சார்பில் நிவாரண தொகுப்புகள் வழங்கல்

நடிகர் விஜய் 47வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், உதகையில் 200 பேருக்கு காய்கறி, மளிகை தொகுப்புகள் வழங்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, உதகையில் வாழ்வாதாரத்தை இழந்து உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளர்கள், சுற்றுலா வாகன ஓட்டிகள், வர்ணம் பூசும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மாவட்டத்தில் இன்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவும் காய்கறி தொகுப்புகளும் வழங்கப்பட்டு வருவதாக, விஜய் மக்கள் மன்றத்தினர் தெரிவித்தனர்.

இந்த நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் விஜய் ரசிகர் மன்றத் தலைவர் ரமேஷ், செயலாளர் கணேஷ், பொருளாளர் ராஜேஷ் , துணைத் தலைவர் ஜெயக்குமார், செய்தி தொடர்பாளர் ஆனந்த், துணை செயலாளர் சந்தோஷ், துணை பொருளாளர் சிவா, மற்றும் மாவட்ட மகளிரணி எஸ்தர், பாக்கியா, ஷர்மிளா, ராபியா வசந்தி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!