உதகையில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்: ஆர்வமுடன் பங்கேற்ற பொதுமக்கள்

உதகையில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்: ஆர்வமுடன் பங்கேற்ற பொதுமக்கள்
X

உதகை 32 வது வார்டில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது

உதகை, 32வது வார்டு பகுதி மக்கள் சுமார் 1000 பேருக்கு இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மாவட்ட நிர்வாகமானது கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது. அவ்வகையில், நகராட்சி, பேரூராட்சி ,ஊராட்சி, என அனைத்து இடங்களிலும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தடுப்பூசி முகாமின் ஒருபகுதியாக, உதகை நகரில் 32வது வார்டு எல்க்ஹில் பகுதியில், வார்டு உறுப்பினர் ரவிக்குமார் தலைமையில் ஆயிரம் பேருக்கு, முதல் டோஸ் கோவாக்ஸ்ன் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று, சமூக இடைவெளியை கடைபிடித்து, தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!