நீலகிரி மாவட்டத்தில் இன்று எங்கெங்கே தடுப்பூசி முகாம் நடக்கிறது

நீலகிரி மாவட்டத்தில் இன்று எங்கெங்கே தடுப்பூசி முகாம் நடக்கிறது
X
நீலகிரி மாவட்டம் முழுவதும் கோவிஷீல்டு முதல் மற்றும் 2 ம் கட்ட தடுப்பூசி செலுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் இன்று 12. 7 .21 தேதியில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்படும் இடங்களின் விவரம் வருமாறு:

உதகை நகரில் ஓம் பிரகாஷ் துவக்கப்பள்ளி காந்தல், பால்பண்ணை, குளிச்சோலை, பாரதியார் நகர் பட்பயர் ஆகிய இடங்களில் 600 டோஸ் தடுப்பூசிகளும், குன்னூர் நகராட்சியில் நகராட்சி டவுன் பள்ளி, ஜாக் பள்ளிவாசல், சமுதாயக்கூடம் மாடல் ஹவுஸ், உள்ளிட்ட இடங்களில் 600 டோஸ் தடுப்பூசிகளும், கூடலூர் பகுதியில் செயின்ட் மேரிஸ் உயர்நிலைப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் 400 டோஸ் தடுப்பூசிகளும் போடப்படுகின்றன.

நெல்லியாளம் நகராட்சி அங்கன்வாடி நாடுகாணி பஜார், அஞ்சல் நிலைய பகுதி நாடுகாணி, உள்ளிட்ட பகுதிகளில் 200 டோஸ் தடுப்பூசிகளும், உதகை வட்டாரத்தில் இத்தலார், M.பாலாடா கல்லட்டி, கூக்கல் தொரை, தூனேரி, தும்மனட்டி, தங்காடு ஓரநள்ளி,பிக்கட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1600 டோஸ் தடுப்பூசிகளும், குன்னூர் வட்டாரம் அணியாடா, இளித்தொரை சமுதாயக் கூடங்களிலும் எடப்பள்ளி துணை சுகாதார நிலையத்தில் 400 டோஸ் தடுப்பூசிகளும் இன்று போடப்படுகிறது.

அதேபோல், கோத்தகிரி வட்டாரம் கெரடா மட்டம் சமுதாயக் கூடத்தில் 400 டோஸ்களும் கூடலூர் வட்டாரத்தில் குனியல் சமுதாயக் கூடம், மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையம், நாயக்கன் சோலை ஊராட்சி ஒன்றிய பள்ளி ,பாட்டவயல் ஊராட்சி ஒன்றிய பள்ளி, பிதர்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 750 தடுப்பூசிகளும் சோலூர் பேரூராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 டோஸ் தடுப்பூசிகளும் நடுவட்டம் பேரூராட்சி பழைய மருத்துவமனை கட்டிடத்தில் 100 டோஸ் தடுப்பூசிகளும் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பிக்கட்டி பேரூராட்சியில் சிவசக்தி நகர் சமுதாயக்கூடம், தேயிலை குடில் பாரதி புதூர், ஒசஹட்டி சமுதாயக்கூடம், பேரூராட்சி அலுவலகம் பிக்கட்டி எடக்காடு, கெரப்பாடு சமுதாய கூடங்களில் 1000 டோஸ் தடுப்பூசிகளும், கீழ்குந்தா பேரூராட்சியில் காமராஜர் நகர், ஓணிகண்டி சமுதாய கூடங்களில் 100 டோஸ் தடுப்பூசிகளும், அதிகரட்டி பேரூராட்சியில் தாம்பட்டி சமுதாயக் கூடத்தில் 100 டோஸ் தடுப்பூசிகள், கேத்தி பேரூராட்சி கெக்கட்டி சமுதாயக் கூடத்தில் 200 டோஸ் தடுப்பூசிகளும், உலிக்கல் பேரூராட்சி கீழ் பாரதிநகர் சமுதாய கூடத்தில் 100 டோஸ் தடுப்பூசி போட முகாம் நடக்கிறது.

இதுதவிர, ஜெகதளா பேரூராட்சி அலுவலகத்தில் 100 டோஸ்களும், கோத்தகிரி பேரூராட்சி குமரன் காலணி சமுதாய கூடத்தில் 250 டோஸ்களும், ஓவேலி பேரூராட்சி காமராஜர் நகர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 200 டோஸ், தேவர் சோலை பேரூராட்சி பாவனா நகர் ஊராட்சி ஒன்றிய பள்ளி மற்றும் மஞ்சமூலா அங்கன்வாடி மையத்தில் 200 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளன. தடுப்பூசி மையங்களில் டோக்கன்கள் ஏதும் வழங்கப்படமாட்டாது எனவே பொதுமக்கள் யாரும் டோக்கன் பெறுவதற்கு தடுப்பூசி மையங்களுக்கு வருகை புரிய வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself