நீலகிரி மாவட்டத்தில் இன்று தடுப்பூசி செலுத்தும் இடங்கள்

நீலகிரி மாவட்டத்தில் இன்று தடுப்பூசி செலுத்தும் இடங்கள்
நீலகிரி மாவட்டயில் இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் விவரத்தை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 2 .7 21 இன்று கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களின் விபரத்தை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தடுப்பூசி செலுத்தும் இடங்கள் வருமாறு: இந்தலார், பாலடா, கல்லட்டி ,தும்மனட்டி, கூக்கல் தொரை, சோலூர், நடுவட்டம், தூனேரி, ஆகிய பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்கள். நஞ்சநாடு, முள்ளிகூர், மந்தனை, எப்பநாடு, கன்னி மாரியம்மன் கோவில் (அங்கன்வாடி மையம் குன்னூர்), நெற்கொம்பை, ஆரக்கோம்பை, தூதூர் மட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள சமுதாய கூடங்கள்.

காந்திநகர் கோத்தகிரி ஈளாடா, பாரதிநகர் ஈளாடா ஆகிய இடங்களில் துணை சுகாதார நிலையங்களிலும், கட்டபெட்டில் சக்தி நகர் அங்கன்வாடி மையம், என்ன கொம்பை சமுதாயக்கூடம், கீழ்க்கோத்தகிரி அம்மன் நகர் அங்கன்வாடி மையம் ஆகிய இடங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது.

இதேபோல் கூடலூரில் ஸ்ரீ மதுரை, மசினகுடி, தெப்பக்காடு, ஓவேலி, கொளப்பள்ளி, உப்பட்டி, சேரம்பாடி , அம்பலமூல, நிலக்கோட்டை, கம்பாலா, கூடலூர் (நகர்புற சுகாதார நிலையம்) நெல்லியாளம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதல் மற்றும் இரண்டாம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

மேற்கண்ட தடுப்பூசி மையங்களில் டோக்கன் எதுவும் வழங்கப்படாது பொதுமக்கள் யாரும் டோக்கன் பெறுவதற்கு தடுப்பூசி மையங்களுக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். டோக்கன் அவரவர் இல்லங்களில் நேரடியாக விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story