தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே நீலகிரிக்குள் அனுமதி- மாவட்ட ஆட்சியர்
நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா.
நீலகிரியில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இதுவரை 6 லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி, 501 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது. மூன்றாவது அலையை எதிர்க்கொள்ள தடுப்பூசி ஒன்றே சாத்திய கூறாக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறினார்.
இதுகுறித்து நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், நீலகிரி சோதனை சாவடிகளில் பிற மாநிலத்தவர் வருவதை கண்காணிக்க வருவாய், சுகாதார துறையில் சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 45-60 வயது தடுப்பூசி 90 சதவீதம், கர்ப்பிணி பெண்கள் 99 சதவீதம் தடுப்பூசி பணி நிறைவு பெற்றுள்ளது. மொத்தம் 5.8 லட்சம் பேரில் 4.55 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
சுற்றுலா பயணிகளை நம்பியுள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், சுற்றுலா வாகன ஓட்டிகள், வழிகாட்டிகள் தோட்டக்கலைத்துறையினர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே சுற்றுலா ஸ்தலங்களை திறக்க அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கேரளா மற்றும் கர்நாடக எல்லையை ஒட்டி உள்ள சோதனைச் சாவடிகளில் வருவாய் துறையினருடன் மருத்துவக் குழுவும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா இல்லை என்பதற்கான சான்றும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று இருந்தால் மட்டுமே சுற்றுலா பயணிகள் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu