நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடுப்பூசி சான்று கட்டாயம்: ஆட்சியர் தகவல்

நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு  தடுப்பூசி சான்று கட்டாயம்: ஆட்சியர் தகவல்
X

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா.

நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வர கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தேவையில்லை. 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் கலெக்டர்.

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்; பந்தலூர், கூடலூர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பந்தலூரில் 77 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் மழை அதிகமானால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு குழு மூலம் பொதுமக்களை முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நீலகிரியில் இதுவரை வீடு, பயிர் சேதம் இல்லை. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வர கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தேவையில்லை. ஆனால், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

சோதனைச் சாவடிகளில் சரிபார்த்த பின்னர் அனுமதிக்கப்படும். நீலகிரியில் முதல் டோஸ் 99 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பாதித்து 90 நாட்கள் பூர்த்தி அடையாத நபர்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் 2-வது டோஸ் செலுத்தும் பணி 50 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. நீலகிரியில் முதல் டோஸ் செலுத்தி 2-வது டோஸ் போட குறிப்பிட்ட நாட்களாகியும் 84 ஆயிரம் பேர் செலுத்தாமல் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!