/* */

உதகை வட்டார போக்குவரத்து அலுவலர் திடீர் ஆய்வு

உதகை நகரில் வட்டார போக்குவரத்து அலுவலர் திடீர் ஆய்வு செய்து முகக் கவசம் அணியாத பேருந்து ஓட்டுனர் நடத்துனர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

HIGHLIGHTS

உதகை வட்டார போக்குவரத்து அலுவலர் திடீர் ஆய்வு
X
உதகை வட்டார போக்கு வரத்து அலுவலர் பஸ்களில் ஆய்வு  மேற் கொண்டார்.

கொரோனோ, ஒமிக் ரான் வைரஸ் பரவல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் பொது மக்களுக்கான நோய் தடுப்பு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக உதகை வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் நகரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் சிற்றுந்துகளில் ஆய்வை மேற்கொண்ட அவர் நடத்துனர் ஓட்டுனரிடம் முக கவசம் அணிதல் பேருந்தில் சமூக இடைவெளியை பின்பற்றப் படுகிறதா என கேட்டறிந்து பார்வையிட்டார்.

பின்பு அரசு பேருந்துகளிலும் அனைவரும் முக கவசம் அணிந்துள்ளனரா என பார்வையிட்டு ஓட்டுனர் நடத்துனர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

கனரக வாகனங்களை ஆய்வு செய்தார் ஆட்டோ ஓட்டுநர்கள் சுற்றுலா பயணிகள், சுற்றுலா வாகன ஓட்டிகள் ஆகியோருக்கு முக கவசம் வழங்கினார் .பின்பு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார் வழி நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

Updated On: 10 Jan 2022 2:59 PM GMT

Related News