நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ஊட்டியில் வேட்பாளர்களுடன் ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ஊட்டியில்  வேட்பாளர்களுடன் ஆலோசனை
X
தேர்தல்பிரசாரத்துக்கு 20 பேர் குழுக்களாக செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளதுவாக்கு கேட்டு சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து உதகை நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நகர்மன்ற கூட்டரங்கில் நடந்தது.

கூட்டத்துக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ஆணையாளர் காந்திராஜ் தலைமை தாங்கி பேசியதாவது:- வாக்குச்சாவடிக்குள் முகவர்கள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. வாக்காளர்களை எந்த ஒரு சின்னத்திலும் வாக்களிக்க தூண்டக் கூடாது. கூட்டரங்கம் மற்றும் திறந்த வெளியில் கூட்டம் நடத்தினால் 50 சதவீதம் பேர் மட்டும் கலந்து கொள்ள வேண்டும்.

தேர்தல் பிரசாரத்துக்கு 20 பேர் குழுக்களாக செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. வாக்கு கேட்டு சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது. வேட்பாளர்கள் வழங்கும் பூத் சிலிப்பில் கட்சி சின்னமோ அல்லது வேட்பாளர் பெயரோ இடம்பெறக்கூடாது.தாங்கள் வாக்கு சேகரிக்கும் போது, சக வேட்பாளர்கள் குறித்து தவறான எந்த ஒரு அறிவிப்பையும் அச்சிட்டோ அல்லது எழுதியோ வெளியிடக்கூடாது என்றார். கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் மற்றும் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா